மேட்டூர் அணை நீர்மட்டம் 90.78 அடியாக குறைந்தது

கிழக்கு, மேற்கு கரையோர மக்களுக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை
Published on
Summary

நீர்வரத்தை விட அதிகளவில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டு வந்த உபரிநீர் படிப்படியாக குறைக்கப்பட்டதால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் நேற்று முதல் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து பரிசல்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதே போல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியது. ஆனாலும் நீர்வரத்தை விட அதிகளவில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர்அணையின் நீர்மட்டம் 90.78 கன அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 2958 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கரையோர மக்களுக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 53.54 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com