மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை
Published on
Summary

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 91.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4822 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை தாண்டியது. இதையடுத்து கடந்த 1-ந்தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கும், நேற்று முன்தினம் மதியம் முதல் கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோர மக்களுக்கு குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகாவில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து அங்கிருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவையும் குறைத்து விட்டனர்.

பரிசல் இயக்க தடை

இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் இன்று 25-வது நாளாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்டு இருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து சரிய தொடங்கியது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 91.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4822 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது.

அணையில் இருந்து குடிநீர், பாசனத்துக்கு வினாடிக்கு 12ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 54.38 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com