மேட்டூர் அணை கடந்த 21 ஆண்டுகளில் ஏழு முறை மட்டுமே, ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டுள்ளது- அமைச்சர் செங்கோட்டையன்

பொதுவாக தென்மேற்கு பருவமழை என்பது இன்று குறைவாகத்தான் இருக்கிறது. நமக்கு தேவையான அளவில் இல்லை.
Mettur Dam Opened only seven times in 21 years
Published on

கோவை விமான நிலையத்தில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே இந்த இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். குழந்தைகள் தங்களின் பெற்றோர்களிடம் தவெகவிற்கு வாக்களிக்க சொல்லி கேட்டுக் கொண்டனர்.

அதுபோல தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவை என்பது தான் படித்தவர்கள் மற்றும் பெண்கள் என அனைவரின் விருப்பமாக இருந்தது. அந்த கனவு இப்பொழுது நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அதுபோல மேலை நாடுகளில் உள்ளவர்களும் மாற்றம் தேவை என்று இங்கு வந்து வாக்கு செலுத்தி இருக்கிறார்கள்.

நம்முடைய லட்சியம் என்னவென்று சொன்னால் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் எந்த இடத்தில் இருந்தாலும், நாம் அதை கொண்டுவர வேண்டும்.

பொதுவாக தென்மேற்கு பருவமழை என்பது இன்று குறைவாகத்தான் இருக்கிறது. நமக்கு தேவையான அளவில் இல்லை. வடகிழக்கு பருவ மழை வருகிற போதுதான் நிலைமை எவ்வாறு மாறுகிறது என்று தெரியும்.

மேட்டூர் அணையில் கடந்த 21 ஆண்டுகளில் ஏழு முறை மட்டுமே, ஜூன் 12 அன்று அணை திறக்கப்பட்டுள்ளது. மற்ற காலங்களில் 8 மற்றும் 9 மாதங்களில் தான் திறக்கப்பட்டது.

நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததற்கு அமைச்சர் உடனடியான நடவடிக்கையை எடுத்தார். 200 மூட்டைகள் நனைந்ததாக சொல்கிறார்கள், ஆனால் 20 நெல் மூட்டைகள் மட்டுமே மழையில் நனைந்துள்ளது.

வருகின்ற மாதங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாய் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேகதாது அணையை பொறுத்தவரை, குடிநீர் பெறுவதற்காக அணையைக்கட்ட போவதாக கூறப்பட்டுள்ளது. நம்முடைய விவசாயத்திற்காக பயன்படுத்துகிற ஏறத்தாழ 19 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை தீர்வதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் ஒரு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com