மருத்துவ படிப்பு கலந்தாய்வு விவரங்கள் வெளியீடு

தமிழகத்தில் மருத்துவ படிப்பு கலந்தாய்வு விவரங்கள் வெளியாகி உள்ளன. மருத்துவ கலந்தாய்வுக்கான மெரிட் லிஸ்ட் நேற்று வெளியிடப்பட்டது.
medical education TN
Published on: 

தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் கடந்த மாத இறுதியில் துவங்கி இம்மாதம் 8 ஆம் தேதி மாலை 5 மணி என்று வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தன.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நாளை காலை துவங்குகிறது. தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு மூலமாக நடத்தப்படும் கலந்தாய்விற்கான மெரிட் லிஸ்ட் நேற்று வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி பொதுப்பிரிவினர் நாளை காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

முதற்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கீடு பெறும் மாணவர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்று மாணவர் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com