

சென்னையில் டெங்குவை கட்டுப்படுத்த வார்டு வாரியாக காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி சிகிச்சை பெறலாம்.
சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டு அங்கு தூய்மைப் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
எந்தெந்த வார்டுகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகிறார்கள், அல்லது டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதி கண்டறியப்பட்டு அங்கு சுகாதாரப் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சி கமிஷனர் சமீரன் உத்தரவின் பேரில் சுகாதாரப் பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ள இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. வார்டு வாரியாக தினமும் 100 முகாம்கள் நடக்கின்றன.
15 மண்டலங்களிலும் சுகாதார அதிகாரிகள் மேற்பார்வையில் மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மதியம் வரை நடை பெறுகிறது.
இந்த மருத்துவக் குழுவினர் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் முகாமிட்டு பரிசோதனை மேற்கொள்கின்றனர். 3 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருந்தால் ரத்தப் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.
சென்னையில் டெங்குவை கட்டுப்படுத்த வார்டு வாரியாக காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி சிகிச்சை பெறலாம்.