மத்தூர் அருகே மாமனாரைச் சுத்தியலால் தாக்கி- கத்தியால் குத்திய மருமகன்

கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களாக கீர்த்தனா கணவரைப் பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
மத்தூர் அருகே மாமனாரைச் சுத்தியலால் தாக்கி- கத்தியால் குத்திய மருமகன்
Published on: 
Summary

ஆனந்தன் அளித்த புகாரின் பேரில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சந்திரசேகரனைத் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட கண்ணடஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (49). இவரது மகள் கீர்த்தனா (28). இவருக்கும், பர்கூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (32) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

தகராறு

இந்நிலையில், கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களாக கீர்த்தனா கணவரைப் பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு கீர்த்தனாவின் வீட்டிற்கு வந்த சந்திரசேகரன், குழந்தையைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சந்திரசேகரன், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மாமனார் ஆனந்தனின் முதுகில் தாக்கியுள்ளார். தொடர்ந்து, தன்னிடம் வைத்திருந்த சூரிக்கத்தியால் ஆனந்தனின் குத்தியதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனை

இதில் பலத்த காயமடைந்த ஆனந்தனை, அங்கிருந்தவர்கள் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தன், அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

சமூக வலைதளம்

இதுகுறித்து ஆனந்தன் அளித்த புகாரின் பேரில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சந்திரசேகரனைத் தேடி வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com