வலுக்கட்டாயமாக கைது செய்து அராஜகமாக நடந்துகொள்ளும் போலீசார்: டெல்லி போராட்டத்தில் CPM சண்முகம் கண்டனம்!

இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Marxist  Shanmugam
Published on: 
Summary

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கண்டித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் கடுமையான கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்துள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர் அமைப்பினர் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். போராட்டம் தொடங்குவதற்கு முன்பே முக்கியத் தலைவர்களைப் பாதுகாப்புப் படையினரும் டெல்லி காவல்துறையினரும் தடுத்து நிறுத்தி கைது செய்தது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறையை கண்டித்த சண்முகம்

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பி.சண்முகம், ஜனநாயக முறைப்படி போராட முயன்றவர்கள் மீது காவல்துறை மிகக் கடுமையாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டினார். அமைதியான முறையில் பேரணியாகச் செல்ல முயன்றவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும், வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றியும் காவல்துறை வன்முறையான போக்கைக் கடைப்பிடித்ததாக அவர் சாடினார். மேலும், கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

டெல்லியில் ஜனநாயகத்திற்கு எதிராக அரங்கேறி வரும் இத்தகைய அடக்குமுறைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று சண்முகம் அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடுநிலையைக் கேள்விகேட்டு நடத்தும் போராட்டங்களை அரசு ஒடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com