கோயம்பேட்டில் சாமந்தி, மல்லிகை விலை கடும் உயர்வு

நவராத்திரி பண்டிகை காலங்களில் சாமந்தி, ரோஸ் போன்ற பூக்கள் அதிக அளவில் விற்பனையாகும்.
சாமந்தி பூ
Published on: 
Summary

நவராத்திரியில் 9 நாட்களுமே சுவாமி பூஜைகளுக்காக அதிக அளவில் பூ விற்பனையாகும்.

ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நவராத்திரி பண்டிகை காலங்களில் சாமந்தி, ரோஸ் போன்ற பூக்கள் அதிக அளவில் விற்பனையாகும்.

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இன்று பூ விலை அதிகமாக இருந்தது. மொத்த விலைக்கு ஒரு கிலோ சாமந்தி ரூ.250-க்கும் ரோஜா பூ ரூ.250-க்கும் விற் பனையானது. மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1500-க்கு விற்கப்பட்டது. இதனால் சில்லரை விலைக்கு முழம் ரூ.80-க்கு விற்கப்பட்டது.

இதுபற்றி மொத்த வியாபாரியான எஸ்.பி.எஸ். பாண்டியன் கூறியதாவது:-

நவராத்திரியில் 9 நாட்களுமே சுவாமி பூஜைகளுக்காக அதிக அளவில் பூ விற்பனையாகும். வாகனங்களுக்கு ஆயுதபூஜையையொட்டி மாலைகள் போட்டு வழிபடுவார்கள். இதற்கு சாமந்தி பூக்களே அதிகமாக விற்பனையாகும். அதிக அளவில் பூ விற்பனையாவதால்தான் இந்த விலை உயர்வு. ஆயுதபூஜை முடிந்ததும் விலை பாதியாக குறைந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com