

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில், “நம்ம மதுரை... நம்ம போலீஸ்” என்ற பெயரில் 4 கி.மீ. மாரத்தான் போட்டி நாளை (11-ந்தேதி) காலை நடைபெற உள்ளது.
மாரத்தான் ஒத்தக்கடையில் உள்ள டெகாத்லான் அருகில் தொடங்கி நரசிங்கம் - ஒத்தக்கடை - எஸ்.எஸ். மகால் ரோடு யூ-டர்ன் வழியாக மீண்டும் ஒத்தக்கடை - டெகாத்லா னில் முடிவடைகிறது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். ஆண்கள், பெண்கள் இருபாலரும் பங்கேற்கலாம்.
இதற்கு நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. இத்தகவலை மதுரை மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.