மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கு கோடானகோடி நன்றி- மரகதம் குமரவேல்

மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.
மரகதம் குமரவேல்
மரகதம் குமரவேல்
Published on: 
Summary

மதுராந்தகம் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை வகிக்கிறார். திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த அவர், வாக்காளர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, மக்களுக்காக பணியாற்றுவேன் என உறுதியளித்தார்.

முன்னிலை

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் தமிழக வெற்றிக்கழக கட்சி வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை வகித்து வருகிறார்.

தற்போதைய நிலவரப்படி தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை விட 12,774 வாக்குகள் பெற்று மரகதம் குமரவேல் முன்னிலையில் உள்ளார். இதனால் கிட்டத்தட்ட மரகதம் குமரவேலின் வெற்றியானது உறுதிசெய்யப்பட உள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில், மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.

நன்றி

இதற்கிடையே, த.வெ.க. வேட்பாளர் மரகம் குமரவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கு கோடானகோடி நன்றி.

* நான் ஆளுங்கட்சி எம்எல்ஏவாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என நினைத்து வாக்களித்தனர்.

* புரட்சித் தலைவரை போல் முதலமைச்சர் விஜய் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் எழுச்சியாக த.வெ.க.வை வரவேற்கிறார்கள். இன்னும் சுற்றுகள் இருக்கிறது. நிச்சயமாக இன்னும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

* ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெறுவது தான் இலக்கு, அதுதான் லட்சியம்.

* எதற்காக ராஜினாமா செய்தேன்? ஏன் நன்றி கூற வரவில்லை? என மக்களை சந்தித்து 4 மாதமாக விளக்கம் தந்துள்ளேன்.

* நான் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றியவள், அவர்கள் வீட்டு மகளாகத்தான் இதுவரை இருந்துள்ளேன் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com