கொலை குற்றம் இல்லையே... சாதாரண விஷயம் தானே!- தவெக MLA விவகாரத்தில் மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு

வருகிற சட்டசபை இடைத்தேர்தலில் நான் நிச்சயமாக நிற்கலாம் என்றிருந்தேன். ஆனால் எல்லாம் இரண்டு இரண்டாக ரிலீஸ் செய்கிறார்கள்.
மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்
Published on: 
Summary

மாவட்ட பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே எம்.எல்.ஏ. குறுஞ்செய்தி தானே அனுப்பினார். கொலை குற்றம் கிடையாது என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியிருப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

கோவையில் நடிகரும், தவெக ஆதரவளரான மன்சூர் அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொலை குற்றம் இல்லை

என்ன த.வெ.க. எம்.எல்.ஏ. விவகாரம். அவர் குறுஞ்செய்தி தானே அனுப்பியிருக்கார். காஞ்சமாடு கம்பங் கொல்லையில் நுழைந்தது போல திடீரென சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள். புதிது புதிதாக வந்துள்ளனர். அதனால் ஏதோ, தெரியாமல் அனுப்பிவிட்டார். ஆனால் தவறு தவறு தான். கொலை குற்றம் இல்லை. ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால், மறுபடியும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி மன்னிப்பு கேட்டிருக்க வேண்டியதுதான்.

இல்லாவிடின் மாவட்ட கலெக்டர் முன்பு தோப்புக்கரணம் போட வைத்திருக்கலாம். நானாக இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட கலெக்டர் முன்பு சென்று தோப்புக்கரணம் போட வைத்திருப்பேன். இது சாதாரண விஷயம் தானே. பெரிய கொலை குற்றம் எல்லாம் இல்லை. நானும் தான் த.வெ.க.வில் உள்ளேன். எனக்கு பதவி, பொறுப்பு எதுவும் இல்லை. நான் எப்படி பேச முடியும்? வருகிற சட்டசபை இடைத்தேர்தலில் நான் நிச்சயமாக நிற்கலாம் என்றிருந்தேன். ஆனால் எல்லாம் இரண்டு இரண்டாக ரிலீஸ் செய்கிறார்கள். என்னவென்றே தெரியவில்லை. வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு, லால்குடியில் போட்டியிட்டது.

மிகப்பெரிய தவறு

தெரியாத்தனமாக நின்றுவிட்டேன். 2, 3 நாட்கள் இருந்து பிரசாரத்தை முடித்திருந்தால் கவுரவமாக ஓட்டு வாங்கியிருப்பேன். உடல்நிலை சரியில்லை. குடும்ப டாக்டர் அங்கு வரமுடியாது என்று கூறிவிட்டார். அதனால் விட்டு விட்டு, பெரியக்கட்சிக்கு ஆதரவு வழங்கி சென்று விட்டேன். அது மிகப்பெரிய தவறு.

அதனாலேயே நான் இடைத்தேர்தலில் நிற்கலாம். 5 தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிட முதலமைச்சரை சந்தித்து வாய்ப்பு கேட்பேன். எங்கள் விளையாட்டு அகாடமியை பெரிதாக வளர்ப்பேன். மக்கள் ஆதரவுடன் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X