

கர்நாடகா அரசு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுப்பு தெரிவித்தது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் வேறு வழியில்லாமல் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது.
கர்நாடகாவை உரிய தண்ணீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்தார்.
இதற்கிடையே கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி மீது அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம் வைத்தார்.
அன்புமணி ராமதாஸ் அவர்களை நாம் சும்மா விட்டுவிடக் கூடாது. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் காங்கிரஸ்தான் காரணம் என்று சொல்லும் அவர், இதையும் மறந்து விடக்கூடாது. தண்ணீர் திறந்துவிடும்போது, அதை மறிக்கும் பாஜக-வினர் பற்றி பேசமால் ஏன் சைலன்ட் மோடுக்கு போய்விடுகிறார்? என்று தெரியவில்லை.
பாஜக என்று பேச்சு வந்தாலும் சைலன்ட் மோடுக்கு போய்விட்டார். ஏனென்றால் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதுதான காரணம். மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியதற்காக ஊழல் செய்தது விளைவாக இன்னும் வழங்கு நிலுவையில் உள்ளதால், பா.ஜ.க. ஆட்டுவிக்கின்ற பொம்மை போன்று அன்புமணி செயல்படுகிறார்.
அவரை பொறுத்தமட்டில் தமிழர்கள் மீது அவ்வளவு அன்பு இருக்கிறது என்றால், குரல் கொடுப்பதாக நினைத்தால் பா.ஜ.க செய்யும் அட்டூழியத்தையும், தண்ணீர் திறந்து விடும் கர்நாடக அரசுக்கு எதிராக போராடும் பாஜக-வையும் அன்புமணி ராமதாஸ் கண்டிப்பாரா? என்பது முக்கியம்.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.