குழந்தைகளின் ஆதார் அட்டையில் இந்த மாற்றம் கட்டாயம்: 2027 வரை இலவசம்..பெற்றோர்களே கவனம்!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள ஆதார் சேவை மையங்களுக்கு அழைத்துச் சென்று பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 Aadhaar card
Published on: 
Summary

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைகளின்படி, குழந்தைகளுக்கு 5 வயது நிறைவடையும்போதும், அதன் பின்னர் 15 வயது நிறைவடையும்போதும் அவர்களின் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் ஆதார் அட்டையில் மேற்கொள்ள வேண்டிய கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை, வரும் 2027-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை எவ்விதக் கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆதார் விவரங்களை உரிய நேரத்தில் புதுப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கட்டாய விதிமுறை

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைகளின்படி, குழந்தைகளுக்கு 5 வயது நிறைவடையும்போதும், அதன் பின்னர் 15 வயது நிறைவடையும்போதும் அவர்களின் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, குழந்தைகளின் கைரேகை, கருவிழிப் படலம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை ஆதார் பதிவுகளில் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்.

புதுப்பிக்க அறிவுறுத்தல்

குழந்தைகளின் ஆதார் விவரங்களைச் சரியான நேரத்தில் புதுப்பிப்பதன் மூலம் பள்ளிச் சேர்க்கை, போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் எவ்விதத் தடையுமின்றி ஆதார் அட்டையைப் பயன்படுத்த முடியும். எனவே, அறிவிக்கப்பட்டுள்ள இந்த இலவச கால அவகாசத்தைப் பயன்படுத்தி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள ஆதார் சேவை மையங்களுக்கு அழைத்துச் சென்று பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

X