லாரியில் கஞ்சா மூட்டைகளை கடத்தி வந்தவர் கைது

லாரியுடன் கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
லாரியில் கஞ்சா மூட்டைகளை கடத்தி வந்தவர் கைது
Published on: 
Summary

கைதான முருகன் பொன்னேரி மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுவாயல்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் அகரம் கூட்டுச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியே வந்த லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.

கஞ்சா

அப்போது அந்த லாரியில் 2 மூட்டைகளில் சுமார் 40 கிலோ எடை கொண்ட கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இதையடுத்து அந்த லாரியுடன் கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

போலீசார் வழக்கு பதிவு

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம், குட்டத்துப்பட்டி,பேகம்பூர் வாழி, வெய்யடிச்சான்பட்டி கிராமம், பிரைமலை கல்லார் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது50) என்பவரை கைது செய்தனர். கைதான முருகன் பொன்னேரி மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com