வெளி மாநிலங்களின் கல்வி சுற்றுலாவில் மாமல்லபுரம் முதலிடம்

மாமல்லபுரத்தை தான் தேர்வு செய்வதாக வெளிமாநில ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
Mahabalipuram
Published on: 
Summary

மாணவர்களிடம் கல்வி சுற்றுலா போவது குறித்து கருத்து கேட்டால், அவர்கள் கடலும், கடல் சார்ந்த அழகுடன் கூடிய புராதன சின்னங்களும் உள்ள மாமல்லபுரத்தை தான் தேர்வு செய்வதாக வெளிமாநில ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் முதலிடமாக இருந்து வந்த தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளி, மாமல்லபுரம் முதலிடமாக இருந்து வருகிறது.

புராதன சின்னம்

இந்த நிலையில் தற்போது வெளிமாநில பள்ளி, கல்லூரிகளின் கல்வி சுற்றுலாவிலும் மாமல்லபுரம் முதலிடம் பிடித்து வருகிறது. மாணவர்களிடம் கல்வி சுற்றுலா போவது குறித்து கருத்து கேட்டால், அவர்கள் கடலும், கடல் சார்ந்த அழகுடன் கூடிய புராதன சின்னங்களும் உள்ள மாமல்லபுரத்தை தான் தேர்வு செய்வதாக வெளிமாநில ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மாமல்லபுரம்

இன்று காலை ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தனித்தனி குழுவாக மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் பாறை, ஐந்துரதம், புலிக்குகை பகுதிகளை சுற்றி பார்த்தனர். வழிகாட்டி வரதன் அவர்களுக்கு தெலுங்கு மொழியில் வரலாறுகளை எடுத்துக் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com