மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் தேவேந்திரன் லாரிக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
Published on: 
Summary

மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பகுதியில் இருந்து சென்னைக்கு எம்-சாண்ட் ஏற்றிய லாரி ஒன்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக இன்று காலை வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த டிரைவர் தேவேந்திரன் (வயது 47) ஓட்டினார்.

மாமல்லபுரம்

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி மேம்பாலம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் தேவேந்திரன் லாரிக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணிநேரம் போராடி லாரிக்குள் சிக்கி இருந்த தேவேந்திரனின் உடலை மீட்டனர்.

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி

பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X