

கடலின் சீற்றம் அதிகமாக இருப்பதால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள “அர்னாப்” புயலானது நாளை ஆந்திரா பகுதியில் கரையை கடக்கிறது. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும் புயல் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் அர்னாப் புயலால் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமங்களான நெம்மேலி, சூலேரிக்காடு, புது கல்பாக்கம், தேவநேரி, பட்டிப்புலம், வெண்புருஷம், கொக்கிலமேடு பகுதிகளில் 10 அடிக்கு மேல் அலைகள் எழுகின்றன.
கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வில்லை. அவர்கள் தங்களது படகுகள், வலைகள் மற்றும் மோட்டார் சாதனங்களை உயரமான பகுதிகளில் பாதுகாப்பாக வைத்து வருகின்றனர்.
சுமார் 2000-க்கும் மேற்பட்ட படகுகளின் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது.
கடலின் சீற்றம் அதிகமாக இருப்பதால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று போலீசார் எச்சரித்து வருகின்றனர்.