மதுராந்தகம் தொகுதியில் டீக்கடையில் தேநீர் அருந்தி, டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் விஜய்

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார்.
CM Vijay
Published on: 
Summary

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் தேர்தல் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் த.வெ.க. வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் த.வெ.க.வினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து த.வெ.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய் கடந்த 25-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

மதுராந்தகத்தில் ரோடு ஷோ

இதையடுத்து மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து இன்று இரண்டாவது முறையாக முதலமைச்சர் விஜய் பிரமாண்ட 'ரோடுஷோ' நடத்தி பிரசாரம் செய்தார்.

இதைத்தொடர்ந்து மதுராந்தகம் தொகுதியில் உள்ள செம்பூண்டி, கிளியா நகர், எல்.எண்டத்தூர், கூடப்பாக்கம் மற்றும் ராமாபுரம் ஆகிய பகுதிகளில் விசில் சின்னத்தில் வாக்களிக்கும்படி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது திரளான தொண்டர்கள் முதலமைச்சரின் வாகனத்தை சுற்றி அணிவகுத்து சாலை மார்க்கமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

டீக்கடையில் தேநீர் அருந்திய முதலமைச்சர்

இதற்கிடையில் எல்.எண்டத்தூர் பகுதியில் உள்ள ஒரு சிறிய டீக்கடையில் முதலமைச்சர் விஜய் தேநீர் அருந்தினார்.

அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோர்களும் தேநீர் அருந்தினர்.

டிராக்டர் ஓட்டிய விஜய்

இதையடுத்து கிளியா நகர் பகுதியில் வயல்வெளிகளில் வேலை பார்த்து வந்த விவசாயிகளிடம் முதலமைச்சர் விஜய் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் ராமாபுரம் பகுதிக்கு வந்த முதலமைச்சர், விவசாயி ஒருவரின் டிராக்டரை வாங்கி வயலில் ஓட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com