மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்: த.வெ.க. தொடர்ந்து முன்னிலை

மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்களில், 1 லட்சத்து 84 ஆயிரத்து 413 பேர் வாக்களித்து இருந்தனர். 86.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்: த.வெ.க. தொடர்ந்து முன்னிலை
Published on: 
Summary

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தபால் வாக்குகளிலும் த.வெ.க. முதலிடம் பிடித்தது. தொண்டர்கள் வெற்றியை கொண்டாட பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் திரண்டுள்ளனர்.

மது​ராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

வேட்பாளர்கள்

மது​ராந்​தகம் தொகு​தி​யில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமர​வேல், தி.மு.க. வேட்பாளர் பரந்​தாமன், அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்​பத், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி​ராமன் மற்​றும் சுயேச்சை​கள் என மொத்​தம் 27 பேர் போட்டியிட்டனர்.

தாராபுரம் தொகு​தி​யில் த.வெ.க. வேட்பாளர் சத்​யபா​மா, தி.மு.க. வேட்பாளர் சுகன்​யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானு​ம​தி, இந்​திய கம்யூனிஸ்டு வேட்பாளர் லட்​சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்​திகா மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 22 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவியது.

வாக்குப்பதிவு

மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்களில், 1 லட்சத்து 84 ஆயிரத்து 413 பேர் வாக்களித்து இருந்தனர். 86.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தாராபுரம் தொகுதியில் மொத்தம் உள்ள 2,23,306 வாக்காளர்களில் 1,79,314 பேர் வாக்களித்து இருந்தனர். 80.30 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

வாக்கு எண்ணிக்கை

2 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 2 தொகுதிகளிலுமே தபால் வாக்குகளில் த.வெ.க. முதலிடம் பிடித்தது. தி.மு.க. 2-வது இடத்தையும், அ.தி.மு.க. 3-வது இடத்தையும் பிடித்திருந்தது.

வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கள நிலவரமும் நிமிடத்திற்கு நிமிடம் மாறுகிறது. மதுராந்தகம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் த.வெ.க. முன்னிலை வகித்தது. தாராபுரம் தொகுதியில் சில சுற்றுகளில் அதிகம் வாக்குகள் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்தார். அதன்நடைபெற்று வரும் வாக்கு சுற்று எண்ணிக்கையில் த.வெ.க. மீண்டும் முன்னிலை வகிக்கிறது.

அதன் விவரம் வருமாறு:-

தாராபுரம் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்

த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா- 27,649

அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி- 23,521

தி.மு.க. வேட்பாளர் சுகன்யா - 22,503

நாம் தமிழர் கட்சி -2,156

சிபிஐ-509

மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்

த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல்- 31,057

தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் - 20,648

அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத் - 17,681

நாம் தமிழர் கட்சி- 944

சிபிஎம்- 747

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை பெற்றுள்ளதால் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com