

ஆவணங்கள், உபகரணங்கள் பாதுகாப்பு அறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தேர்தலுக்கு முந்தைய நாள் ஓட்டுச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது.
அரசியல் கட்சியினர் போட்டி போட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களை கட்டி உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் மொத்தம் 167 இடங்களில் 285 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக மதுராந்தகம் தொகுதியில் பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஸ்ட்ராங் அறையில் பாதுகாப்பாக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
தேர்தலின்போது ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மதுராந்தகம் தேர்தல் துறை கிடங்கில் இருந்து, ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக சீரமைக்கும் பணிகள் நேற்று, நடந்தது.
இதில், ஓட்டுச் சாவடிகளில் பயன்படுத்த உள்ள வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் மை, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கையேடுகள், தேர்தல் விதிமுறை புத்தகங்கள், படிவங்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட உபகரணங்கள் உள்ளன.
இந்த ஆவணங்கள், உபகரணங்கள் பாதுகாப்பு அறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தேர்தலுக்கு முந்தைய நாள் ஓட்டுச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.