மதுராந்தகத்திற்கு புதிய நம்பிக்கை மரகதம் குமரவேல்..!- தவெக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ஆனந்த் வாக்குசேகரிப்பு

'1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது; 2026-ல்தான் தமிழகத்திற்கு சுதந்திரம் கிடைத்தது'.
Minister N Anand
Published on: 

மதுராந்தகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் முதல்வர் விஜய்யின் இடைத்தேர்தல் பிரசாரம் தொடங்கியது. அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினர்.

இதனைத்தொடர்ந்து, மதுராந்தகம் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் என்.ஆனந்த் பேசினார்.

அப்போது அவர் உரையாற்றியதாவது:-

நான் வாக்கு சேகரிக்க செல்லும்போது ஒரு பெண் சொன்னார், '1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது; 2026-ல்தான் தமிழகத்திற்கு சுதந்திரம் கிடைத்தது'.

முதலமைச்சர் விஜயின் பாதம்பட்ட மதுராந்தகம் தொகுதி இனி அவருடைய கோட்டையாக மாறும்.

அதற்குக் காரணம் நம் தலைவர்-வேட்பாளர் என்றால் தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர் அல்ல; மக்கள் அழைக்கும் போதெல்லாம் வருபவர். மதுராந்தகத்திற்கு புதிய நம்பிக்கை தேவைப்படுகிறது. அதன் பெயர் மரகதம் குமரவேல்.

யார் என்ன பிரச்னைகளை கூறினாலும் சிரித்த முகத்துடன் அதை சரி செய்து தருவார் மரகதம் குமரவேல்.

மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும்; மக்கள் அழைக்காமலேயே மக்களை தேடி வருபவர்தான் மக்கள் பிரதிநிதி.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com