Tamil News Live: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தபால் வாக்கில் தவெக முன்னிலை

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பின்னர் எந்திரங்களில் பதிவானவை எண்ணப்படும்.
Tamil News Live: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தபால் வாக்கில் தவெக முன்னிலை

95 வாக்குகள் பெற்று மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலை.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை

மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

70 வாக்குகள் பெற்று மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலை.

மதுராந்தகம் தபால் வாக்கு நிலவரம்: தவெக 70, திமுக-59, அதிமுக-34

தாராபுரம் தொகுதியில் தவெக, திமுக இடையே கடும் போட்டி

தாராபுரம் தபால் வாக்கு நிலவரம்: தவெக-81, திமுக - 80, அதிமுக-52, சிபிஐ-2

தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமா வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தார். அவர் வந்த காரில் இருந்த தவெக கொடியை அகற்றிய பின் அனுமதிக்கப்பட்டார்.

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா தபால் வாக்கில் முன்னிலை

மதுராந்தகம், தாராபுரத்தில் தபால் வாக்குகளில் தவெக முன்னிலை

மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் ஸ்ட்ராங் ரூம் திறப்பு. அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களான மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம்கள் திறப்பு.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரி தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

அதன்பின்னர் எந்திரங்களில் பதிவானவை எண்ணப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com