மதுரை காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த நபர் தற்கொலை- ஆய்வாளர் சஸ்பெண்ட்

புகாரளிக்க வந்தவரே தற்கொலை செய்ததால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Lorry Driver suicide
Published on: 

மதுரை, உசிலம்பட்டி அருகே 4 நாட்கள் முன்பு ஏலக்காய் மூட்டைகளை ஏற்றி வந்த தனது லாரி தீப்பிடித்து எரிந்ததாக லாரி ஓட்டுனர் பாலகிருஷ்ணன் புகாரளிக்க காவல் நிலையம் வந்துள்ளார் .

புகாரில் சந்தேகம் இருப்பதாகக் கருதிய செக்கானூரணி போலீசார், விசாரணைக்காக அவரை அழைத்து வந்துள்ளனர்.

காவல் ஆய்வாளர் அறையில் அவரை அமர வைத்துவிட்டு, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காக போலீசார் புறப்பட்டுள்ளனர்.

போலீசார் திரும்பி வந்து பார்த்தபோது, அவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

புகாரில் முரண்பாடு ஏற்பட்டு போலீசாரிடம் சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட பயத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

புகாரளிக்க வந்தவரே தற்கொலை செய்ததால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை தொடர்ந்து, செக்காணூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் தற்கொலை செய்ததன் எதிரொலியாக காவல் ஆய்வாளர் உள்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாலகிருஷ்ணன் தற்கொலை செய்தபோது பணியில் இருந்த ஆய்வாளர் முத்து, காவலர் கலைச்செல்வி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுனர் தற்கொலை விவகாரம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X