முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நில மோசடி புகார்: 2 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

தேவாலயத்துக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை கொண்டு குறைந்த விலைக்கு வாங்கி மோசடி செய்ததாக புகார்.
அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்
Published on
Summary

தேவாலயத்துக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை கொண்டு குறைந்த விலைக்கு வாங்கி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான புகாரில் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2001- 2006 ஆட்சிக் காலத்தில்..,

தூத்துக்குடி மாவட்டம், சிவராம மங்கலத்தைச் சேர்ந்த வீரசெல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில், தமிழக அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் புனித தோமையார் அப்போஸ்தலர் தேவாலயத்துக்குச் சொந்தமான நிலத்தை சுப்பையா என்பவருடன் இணைந்து, போலி அதிகார பத்திரத்தை சமர்ப்பித்து, வழிகாட்டு மதிப்பீட்டைக் குறைத்து பத்திர பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நடவடிக்கை இல்லை

மேலும், போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட சொத்துகளை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக திருச்செந்தூர் காவல்துறையில் ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி, புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை தொடர்பான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணை இரண்டு வாரங்களுக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com