மாதவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 13-வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை

தகவல் அறிந்ததும் மாதவரம் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மாதவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 13-வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை
Published on: 
Summary

குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு வசித்து வருபவர்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேட்டில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 13-வது தளத்தில் வசித்து வருபவர் பிஜய் குமார் .தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.இவருடைய மகள் (வயது14). இவர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மாணவி வீட்டில் உள்ள வென்டிலேட்டர் ஜன்னல் வழியாக குடியிருப்பின் 13-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

இதில் அவர் 2-வது தளத்தில் விழுந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயம் அடைந்த மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே மாணவி பாலக் பரிதாபமாக இறந்தார்.

போலீசார்

தகவல் அறிந்ததும் மாதவரம் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் வெளியானது.

இறந்து போன மாணவிக்கு சகோதரர் உள்ளார். பெற்றோர் தன்னை ஒரு மாதிரியாகவும், சகோதரனை ஒரு மாதிரியாகவும் நடத்தி வந்ததாக மாணவி மாணவி தனது தோழிகளிடம் கூறி கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜிம் பயிற்சியாளர்

இதற்கிடையே மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவருக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். அதில் "நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என்று குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜிம் பயிற்சியாளருக்கு மாணவி குறுஞ்செய்தி அனுப்பியது ஏன்? பழக்கம் ஏற்பட்டது எப்படி? என்பது பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தற்கொலை

குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு வசித்து வருபவர்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கடைசியாக யாரிடம் பேசினார் என்ற விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள். மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com