படாளம் அருகே லாரி மோதி கணவன்-மனைவி பலி: 3 வயது குழந்தை உயிர் தப்பியது

படாளம் அருகே மெய்யூர் சந்திப்பு அருகே வந்த போது பின்னால் எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
விபத்து
Published on: 
Summary

திருவண்ணாமலை மாவட்டத்தில் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 வயது குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா முனுங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது41). இவரது மனைவி கவிதா என்ற பச்சையம்மாள் (38). இவர்களுக்கு 3 வயது மகன் உள்ளான்.

விபத்து

இன்று காலை வேலு தனது மனைவி, மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். படாளம் அருகே மெய்யூர் சந்திப்பு அருகே வந்த போது பின்னால் எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய வேலுவும், அவரது மனைவி கவிதாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அவர்களது 3 வயது குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியது.

தகவல் அறிந்ததும் படாளம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காயம் அடைந்த குழந்தைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான தம்பதியின் உடல்களும் அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

X