பெண் விடுதலைக்காக பெரியார் முன்னெடுத்த சமரசமற்ற போராட்டத்தை தொடர்வோம் - கனிமொழி

ஆயிரமாண்டுகளாக மக்கள் ஏங்கிய சமூக விடுதலைக்கான போராட்டத்துக்கு விதையிட்டவர் தந்தை பெரியார்.
Kanimozhi
Published on: 

ஈ.வெ. இராமசாமி அவர்களுக்கு 1938-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் 'பெரியார்' என்ற பட்டம் அதிகாரப்பூர்வமாகச் சூட்டப்பட்டது. இந்த நிலையில் ஈவெராவிற்கு பெரியார் பட்டம் சூட்டப்பட்ட நாளை நினைவுக்கூர்ந்து திமுக எம்பி கனிமொழி பதிவிட்டுள்ளார்.

ஈ.வெ. இராமசாமி அவர்களுக்கு 1938-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் 'பெரியார்' என்ற பட்டம் அதிகாரப்பூர்வமாகச் சூட்டப்பட்டது. பெண்களின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்காக அவர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில் இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள நாடகக் கொட்டகையில் இம்மாநாடனது நடைப்பெற்றது

தமிழறிஞர் மறைமலையடிகளின் மகளான திருவரங்க நீலாம்பிகை அம்மையார் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அன்னை மீனாம்பாள் சிவராஜ் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். டாக்டர் தர்மாம்பாள், பண்டித நாராயணி உள்ளிட்ட பல பெண் ஆளுமைகள் இம்மாநாட்டை முன்னின்று நடத்தினர். இந்த மாநாட்டின் முதல் தீர்மானமாக ஈவெராவிற்கு பெரியார் என்ற பட்டமானது வழங்கப்பட்டது.

சாதி ஒழிப்புக்காகவும் பெண் விடுதலைக்காகவும் அவர் முன்னெடுத்த சமரசமற்ற போராட்டத்தைத் தொடர்வோம் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

ஆயிரமாண்டுகளாக மக்கள் ஏங்கிய சமூக விடுதலைக்கான போராட்டத்துக்கு விதையிட்டவர் தந்தை பெரியார். பெண்ணுரிமைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய அவருக்கு, 1938-ஆம் ஆண்டு இதே நாளில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் நீலாம்பிகை அம்மையார், அன்னை மீனாம்பாள், மருத்துவர் தருமாம்பாள் உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் பெண் முன்னோடிகள் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயரைச் சூட்டினர்.

தந்தை பெரியாரின் சிந்தனைகள் தமிழ்ச் சமூகத்துக்கு இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும். சாதி ஒழிப்புக்காகவும் பெண் விடுதலைக்காகவும் அவர் முன்னெடுத்த சமரசமற்ற போராட்டத்தைத் தொடர்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

TN CM Vijay- TRB Raja
தவெகவினரிடமிருந்தே தமிழ்நாடு பெண்களை பாதுகாக்க முடியாதவருக்கு முதலமைச்சர் பதவி எதற்கு? - நயினார் கேள்வி!
செல்வப்பெருந்தகை
அத்துமீறிய சட்டமன்ற உறுப்பினர்கள், துணைபோன காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிபிஎம் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
X