

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இடையீட்டு மனுவின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
தூணில் தீபம் ஏற்ற கடந்த 20ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தூணில் தீபம் ஏற்றவில்லை என தொடர்ந்த அவமதிப்பு வழக்கு மீது மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் தொடங்கின.
இருதரப்பு வாதங்கள் வருமாறு:-
உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஆட்சியர் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் காலம் கடந்தாலும் தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வில் விசாரணை தொடங்கின.
நீதிபதிகள்:- தீபம் தொடர்பான பிரதான வழக்கு மீது இன்று விசாரணை கிடையாது தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் மற்றும் இடையிட்டு மனுக்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள்:- இருபதாம் தேதி இந்த உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ஏன் பின்பற்றப்படவில்லை அதற்கான காரணம் என்ன ? மற்றும் நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் இது இரண்டையும் தவிர வேறு எதைப் பற்றியும் நாங்கள் இன்றைய தினம் விசாரிக்க மாட்டோம்.
அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் இந்த விவகாரத்தை தாண்டி வேறு எந்த வாதங்களையும் முன் வைக்க வேண்டாம் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நீதிபதிகள்:- தீபத் தூணின் மீது இந்த ஆண்டு தீபம் ஏற்றவில்லை அது உண்மை தானே என நீதிபதிகள் கேட்டு குறித்துக் கொண்டனர்.
மனுதாரர்கள் தரப்பு:- உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கான பொறுப்பு ஆட்சியருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகளை தெளிவாக எடுத்திருந்தாலும் தீபம் ஏற்றுவது தொடர்பாக அறங்காவலர்களுடன் உரிய ஆலோசனை நடத்தவில்லை.
இதனையடுத்து தேவஸ்தானம் மற்றும் அறங்காவலர் குழுவானது ஆகம விதிகள் என கூறி ஒரு தீர்மானம் நிறைவேற்றி தீபக் தூணில் தீபமேற்ற மறுத்துவிட்டனர்.
தூணின் மீது தீபம் ஏற்றுவது உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் துணை ராணுவ படையினரையும் அழைத்துக் கொள்ளலாம். இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் நோடல் அதிகாரியாக இருக்க வேண்டும் என மிகத் தெளிவாக உச்சநீதிமன்றம் கூறியும் கூட ஆட்சியர் அதை வேண்டுமென்றே நிறைவேற்றாமல் இருந்திருக்கிறார்.
இது துரதிஷ்டவசமான விஷயம். அறங்காவலர் குழுவானது புதிய இடத்தில் தீபத்தை ஏற்ற ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பழைய இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
ஆனால், அறங்காவலர் குழுவுக்கும் தீபம் ஏற்றுவதற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. அறங்காவர்கள் அப்படியே கூறுயிருந்தாலும் கூட அதை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் மாவட்ட ஆட்சியருக்கு கிடையாது இந்த அறங்காவலர் குழுவின் வார்த்தையை விட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறைந்ததா?
தீபத்தூணில் தீபம் ஏற்றாததை நியாயப்படுத்தவே தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
மனுதாரர் தரப்பு:- அறங்காவலர் குழுவில் மொத்தம் ஐந்து பேர் உள்ளனர். அதில் இடம்பெற்றுள்ள ரெஜினா என்பவர் இந்து மதத்தை சேராதவர். இன்னொரு நபர் இந்த தூணில் தீபம் ஏற்றக்கூடாது என போராட்டம் நடத்தியவர்.
இத்தகைய நபர்கள் தான் இந்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். மதுரை மாவட்ட ஆட்சியரின் அத்தனை செயல்பாடுகளும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தி விடக்கூடாது என்பது மட்டும் தான்.
மனுதாரர் தரப்பு:- மதுரை மாவட்ட ஆட்சியர் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் தீர்மானத்தை எதையும் சரி பார்க்காமல் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
தொல்லியல் துறையிடம் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை முறையாக மேற்கொள்ளவில்லை. கோவிலில் ஸ்தானிகர்கள், அறங்காவலர்கள், முடிவு குறித்து தங்களுக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லை என கூறி இருக்கிறார்கள்.
மனுதாரர் தரப்பு:- தற்போதைய அறங்காவலர்கள் ஐந்து பேரையும் பணியில் தொடர் அனுமதிக்க கூடாது. கார்த்திகை திருநாள் 11 நாட்கள் நடைபெறும் என்பதால் மீண்டும் தூணில் தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக இடைக்காலம் வரவும் தாக்கல் செய்துள்ளோம்.
மனுதாரர் தரப்பு:- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்படாமல் போனதற்கு அரசியல் காரணம்தான்.
நீதிபதிகள்:- இந்த விவகாரத்தில் கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கேட்கிறீர்களா ? அல்லது சிவில் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கேட்கிறீர்களா ?
மனுதாரர் தரப்பு:- இரண்டு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என பதில் அளிக்கப்பட்டுள்ளது.