

விநாயகர் சதுர்த்தி, பண்டிகை நாளை 14-ந் தேதி கொடுக்கிறது. இதையொட்டி பொது மக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம் அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் பல்வேறு வகையான தோற்றம் கொண்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விநாயகர் சிலை, குடை, மாவிலை, தோரணம், எருக்கம் பூ மாலை, கரும்பு, வாழை கன்று, அவல், பொரி, ஆப்பிள், சாத்துக்குடி, பேரிக்காய் விளாங்காய், வாழை இலை, தேங்காய், வாழைத்தார் உள்ளிட்ட பூஜை பொருட்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன.
கடலூர், விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 50-க்கும் லாரிகளில் கரும்பு கட்டுகளும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் விளாங்காய், ஆந்திரா மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து 100 வாகனங்களில் சோளம்.
திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் ஆந்திராவில் இருந்து 50 வாகனங்களில் கரும்பு கட்டுகளும், கொடைக் கானல், ஏற்காடு, தேனி ஆகிய பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் பேரிக்காய், விழுப்புரம் மற்றும் கர்நாடகாவில் இருந்து கொய்யா 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் பழங்கள்.
கடலூர் மற்றும் ஆந்திராவில் இருந்து ஏறத்தாழ 30 லாரிகளில் மஞ்சள் வாழைத்தார்கள், ஆந்திரா, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வாழை கன்றுகள், கர்நாடக மாநிலம் மற்றும் பட்டுக்கோட்டை பொள்ளாச்சி, பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தேங்காய் மற்றும் ஆந்திராவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் சாத்துக்குடி பழங்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அவல், பொரி, கடலை வியாபாரிகளும் கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்துள்ளனர்.
அதிகாலையில் காய்கறி பழங்கள் பூ மற்றும் பூஜை பொருட்கள் வாங்கி செல்ல ஒரே நேரத்தில் குவிந்த சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தால் பூஜை பொருட்களின் விற்பனை களை கட்டியது இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள “ஏ” மற்றும் “இ” சாலை, கோயம்பேடு- விருகம்பாக்கம் இணைப்பு சாலை, மதுரவாயல் -பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
வியாபாரி ஒருவர் கூறும்போது:-
அங்காடி நிர்வாகம் சார்பில் முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை மேலும் ஒலிபெருக்கி மூலம் கரும்பு உள்ளிட்ட பூஜை பொருட்கள் எங்கெங்கு விற்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியவில்லை இதனால் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை சுற்றி உள்ள சாலைகளில் ஆங்காங்கே ஏராளமான வாகனங்களில் கரும்பு, சோளம், கம்பு வாழை கன்று உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் தேக்கமடைந்த நிலையில் உள்ளது இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றார்.
கோயம்பேடு சந்தையில் பூஜை பொருட்கள், பழம் மற்றும் பூக்கள் விற்பனை விலை விபரம் வருமாறு :-
விநாயகர் சிலை 1அடி-ரூ.250முதல் ரூ350வரை, குடை-ரூ.25, எருக்கம் பூ மாலை ஒன்று-ரூ.50, அருகம்புல் கட்டு ஒன்று-ரூ.40, மாவிலை ஒரு கொத்து-ரூ.20, தோரணம் 4 எண்ணிக்கை- ரூ.30, சோளம் ஒரு மூட்டை (90எண்ணிக்கை) - ரூ.600.
வெற்றிலை ஒரு கவுளி (80எண்ணிக்கை) -ரூ.80, வாழை இலை ஒன்று-ரூ.15, பூசணிக்காய் -ரூ. 100வரை, தேங்காய் ஒன்று -ரூ.50, மஞ்சள் வாழைத்தார் ஒன்று -ரூ.600வரை, வாழை கன்று ஒரு கட்டு (10 எண்ணிக்கை) ரூ.150, கம்பு கட்டு ஒன்று (50எண்ணிக்கை) -ரூ.150, கரும்பு ஒரு கட்டு (20 எண்ணிக்கை) - ரூ.300முதல் -ரூ.500வரை.
ஆப்பிள் 1கிலோ ரூ.150, சாத்துக்குடி ஒரு கிலோ-ரூ.70, கொய்யா 1கிலோ- ரூ.150, மாதுளை 1கிலோ -ரூ.200வரை, விளாங்காய் 1கிலோ- ரூ.100, பேரிக்காய் 1கிலோ ரூ.150, களாக்காய் ஒரு படி -ரூ.50, கருப்பங்காய் ஒரு படி -ரூ.50.
நாவல்பழம் ஒரு படி -ரூ.800, அவல் சிறிய பாக்கெட்-ரூ.10, பொரி 1படி -ரூ.30, கடலை சிறிய பாக்கெட்-ரூ.10, நாட்டு சர்க்கரை சிறிய பாக்கெட்-ரூ.10, சாமந்தி பூ 1கிலோ-ரூ.350வரை, பன்னீர் ரோஜா கிலோ- ரூ.250வரை, சாக்லேட் ரோஜா கிலோ- ரூ.300வரை, மல்லி 1கிலோ- ரூ.1500, முல்லை 1கிலோ- ரூ.900, கனகாம்பரம் 1கிலோ- ரூ.1300, அரளி 1கிலோ- ரூ.400, சம்பங்கி 1கிலோ- ரூ.600.