கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Kodaikanal
Published on: 
Summary

கொடைக்கானல் மலைப்பகுதிகளை அலகுபடுத்தும் வண்ணம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்கும். அதன்படி தற்போது மலைப்பகுதியில் அதிக அளவில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் செர்ரி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. குளுமையான கால நிலையுடன் பூத்து குலுங்கும் செர்ரி மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள்

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தரைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் வந்திருந்தனர்.

ரோஜா பூங்கா

இதனால் இன்று காலை முதலே மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. முக்கிய சுற்றுலா இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி முன்பு புகைப்படம், செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு பைன் பாரஸ்ட், குணா குகை, மோயர் பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

நட்சத்திர ஏரியில் படகு சவாரி

இங்கு இதமான குளிருடன் நிலவும் கால நிலையை அனுபவிக்க காலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் ஏரிச்சாலையை சுற்றி நடை பயிற்சி மேற்கொண்டனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். வார இறுதி நாட்கள் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை பகுதிகளுக்கும் சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு பசுமை புல்வெளி, ஆடு, முயல் ஆராய்ச்சி பண்ணை, எழும்பள்ளம் ஏரி, சாகச விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றை கண்டு ரசித்தனர்.

Cherry Blossoms

செர்ரி பூக்கள்

கொடைக்கானல் மலைப்பகுதிகளை அலகுபடுத்தும் வண்ணம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்கும். அதன்படி தற்போது மலைப்பகுதியில் அதிக அளவில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் செர்ரி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. குளுமையான கால நிலையுடன் பூத்து குலுங்கும் செர்ரி மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த பூக்கள் 2 மாதங்களுக்கு பசுமை போர்த்திய மலைப்பகுதிகளில் இளஞ்சிவப்பு நிற மலர்கள் சூடியது போல் அதிக அளவில் பூக்கும். இது கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் உற்சாகமடைய செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com