

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் கனிமொழி சந்தோஷ்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பொறுப்புக்கு நன்றி தெரிவித்து கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கிய முதலமைச்சர் விஜய்க்கும், சட்டப்பேரவைத் தலைவர் JCD பிரபாகருக்கும் எனது மரியாதையுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் மாண்பை முன்னிறுத்தி செயல்படுவதற்கான மற்றுமொரு வாய்ப்பாக இந்தப் பொறுப்பை கருதுகிறேன்.
சட்ட விதிகள் தொடர்பான முக்கிய விவகாரங்களைப் பொறுப்புணர்வுடன் அணுகி, சட்டப்பேரவை செயல்பாடுகளின் சிறப்பை வலுப்படுத்தும் வகையில் தனது பங்களிப்பை வழங்குவேன்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றி முன்னெடுத்துச் செல்வேன் என தெரிவித்துள்ளார்.