கரூர் அரசு பணி: மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!

கரூரில் அரசு பணி வழங்கியதை ரத்து செய்ய உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்காலத்தடை!
TamilNaduGovernment
Published on: 

கடந்த செப்டெம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

உச்ச நீதிமன்றத்தில் மனு

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த மதுரைக்கிளை, வேலை வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதற்கும் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சிலரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் கேள்வி

இந்த வழக்கு இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த அரசு வேலையினை ரத்து செய்ய மதுரை கிளையினுடைய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், எதிர் மனுதாரர்களான சீனி மற்றும் அகமது ஆகியோரும் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முடிவு அரசு எடுத்த கொள்கை முடிவு, இதை எப்படி நீதிமன்றம் தலையிட முடியும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆணை வழங்கக்கூடாது என்று நீங்கள் எப்படி கூற முடியும்? நீங்கள் யார்? என்று தமிழ்நாடு அரசு சார்பில் நீதிபதிகள் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தை கேள்வி எழுப்பினர்.

விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் குறித்தும், எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்திரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com