கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு களிமண் அகல் விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரம்

களிமண்ணால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த அகல் விளக்குகள் விற்பனை தற்போது மந்தமாக உள்ளது.
கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு களிமண் அகல் விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரம்
Published on: 
Summary

மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளான வனவாசி, மேச்சேரி, கொளத்தூர் ஆகிய பகுதிகளிலும் 100-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகள் தயாரிப்பு பணியில் கடந்த சில நாட்களாக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கோவில்கள், வீடுகள் மற்றும் கடைகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதை முன்னிட்டு சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் பாரம்பரிய களிமண் அகல் விளக்குகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளான வனவாசி, மேச்சேரி, கொளத்தூர் ஆகிய பகுதிகளிலும் 100-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகள் தயாரிப்பு பணியில் கடந்த சில நாட்களாக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பாரம்பரிய களிமண் அகல் விளக்குகள் தயாரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

நகரங்களில் பெண்கள் தங்கள் வீடுகளில் களிமண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது குறைந்துள்ளது. தற்போது நவீன விளக்குகள் விதவிதமாக மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் களிமண் அகல் விளக்குகளுக்கு மவுசு குறைந்துள்ளது. இருப்பினும் கிராமங்களில் இன்றும் பெரும்பாலான பெண்கள் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றி கார்த்திகை தீபம் கொண்டாடி வருகின்றனர்.

விளக்குகள்

களிமண்ணால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த அகல் விளக்குகள் விற்பனை தற்போது மந்தமாக உள்ளது. ஒரு மூட்டை விளக்குகள் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினசரி வருமானம் ரூ. 800 முதல் ரூ.1000 வரை கிடைக்கும். மழை காலங்களில் விளக்குகள் தயாரிக்க முடியாது. இந்த மண்பாண்ட தொழில் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் செய்ய முடியும் என்று வேதனையாக தெரிவித்தனர்.

X