குமரி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 39.6 அடியாக உள்ளது. இந்த அணைக்கு விநாடிக்கு 86 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.
குமரி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை
Published on: 

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நகர் பகுதிகளில் சாரல் மழையும், மலையோரம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.

இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 374 கனஅடி தண்ணீர் வரத்து உள்ள நிலையில், 513 கனஅடி வெளியேற்றப்படுகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 18.39 அடியாக உள்ளது.

பெருஞ்சாணி அணை

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 39.6 அடியாக உள்ளது. இந்த அணைக்கு விநாடிக்கு 86 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 275 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணைக்க 76 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

முக்கடல் அணை

25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் 4.8 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 33.63 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 14.6 அடியாகவும் உள்ளது. இன்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கொட்டாரம் 9.2, மயிலாடி 5.2, பாலமோர் 10.6, தக்கலை 2, அடையாமடை 10, மாம்பழத்துறையாறு 7.4, ஆணைக்கிடங்கு 6.4, சிற்றாறு-1 28.2, சிற்றாறு2-26.4, களியல் 6, குழித்துறை 12, பேச்சிப்பாறை 27.4, திற்பரப்பு 6.4, முள்ளங்கினா விளை 23.

X

Maalai Malar
www.maalaimalar.com