தியாகத்தின் உச்சம் வ.உ. சிதம்பரனார்- கமல்ஹாசன்

பிரிட்டிஷாரின் கப்பல் மேலாதிக்கத்தை உடைத்தெறிந்த பெருந்தகை.கன்னியாகுமரிச் சிறையில் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரச் செம்மல்.
தியாகத்தின் உச்சம் வ.உ. சிதம்பரனார்- கமல்ஹாசன்
Published on

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு நாள் இன்று.

இதனையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பிரிட்டிஷாரின் கப்பல் மேலாதிக்கத்தை உடைத்தெறிந்த பெருந்தகை; தேசியச் சிந்தனையோடு தாய்மொழிப் பற்றும் கொண்டிருந்தவர்; கோயம்புத்தூர் சிறையில் செக்கிழுக்க வைத்தாலும், கன்னியாகுமரிச் சிறையில் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரச் செம்மல்.

தியாகத்தின் உச்சமாகத் திகழ்ந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் வீர வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com