

கலெக்டருக்கு இந்த நிலை உள்ளது. எனவே உடனடியாக கட்சியில் இருந்து உடனடியாக அந்த எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ.வை கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கோவை மேற்கு மண்டல குழு சார்பாக மருதமலை சாலை பி.என்.புதூரில் கண்டன ஆர்ப்பாட்டம் மாதர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பேபி, மேற்கு மண்டல செயலாளர் ஹேமா, கட்சி மாவட்ட செயலாளர் சிவசாமி, மேற்கு மண்டல செயலாளர் சந்திரன், துணை செயலாளர் மோகன், மேற்கு மண்டல பொருளர் ஜீவா உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு எம்.எல்.ஏ.வை கைது செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பி பெண்கள் கண்கள், வாய், காது போன்றவற்றில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பு ஏற்று 6 மாத காலம் ஆட்சி பெண்களுக்கான செயல்பாடு மோசமாக உள்ளது. கடந்த ஆட்சி அதற்கு முந்தைய ஆட்சியில் சில தவறுகள் நடப்பது உண்டு. ஆனால் இந்த ஆட்சியில் படித்து பட்டம் பெற்ற மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ. பாலியல் ரீதியாக குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார்.
சாதாரண பெண்களுக்கு ஏற்படும் அநீதி குறித்து போலீஸ் நிலையம், மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிப்பார்கள். ஆனால் கலெக்டருக்கு இந்த நிலை உள்ளது. எனவே உடனடியாக கட்சியில் இருந்து உடனடியாக அந்த எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். பதவியை பறிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்கள் போராட்டம் மாநில முழுவதும் தீவிரமடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.