தவெகவை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது: போலீசார் அதிரடி

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் பத்மஜா என்பவருக்கு தவறான நோக்கத்தில் குறுஞ்செய்து அனுப்பியதாக புகார் எழுந்தது.
தவெகவை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது: போலீசார் அதிரடி
Published on: 
Summary

தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்-ஐ இன்று அவரது இல்லத்தில் தமிழக காவல்துறை கைது செய்தனர்.

தவெக கட்சியை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ, அந்த மாவட்ட ஆட்சியர் பத்மஜா என்பவருக்கு தவறான நோக்கத்தில் குறுஞ்செய்து அனுப்பியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, தவெக அமைச்சர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த திரிசுழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வு, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து வழக்கு குறித்து விசாரணை நடத்திய வலிறுத்தியதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இன்று எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் இல்லத்தில் அவரை கைது செய்தனர்.

X