இருமொழிக் கொள்கையை ஆதரிக்கும் முதலமைச்சர் விஜய் ஆங்கிலம் பேசுவது மகிழ்ச்சி - ப. சிதம்பரம்!

ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி.
இருமொழிக் கொள்கையை ஆதரிக்கும் முதலமைச்சர் ஆங்கிலம் பேசுவது மகிழ்ச்சி - ப. சிதம்பரம்!
Published on: 

சென்னையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பங்கேற்ற அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் பேசியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சை காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,

“இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் விஜய்யின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக் கேட்டேன்.

சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ஐஐடி மைதானத்தில் இன்று (அக்.11) நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ரூபாய் 13,000 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கலும் நாட்டினார்.

அத்துடன், நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்றுள்ள பழனி, நாமக்கல், பரமக்குடி, அம்பாசமுத்திரம் மற்றும் வேலூர் கண்டோன்மென்ட் ஆகிய 5 அம்ரித் ரயில் நிலையங்களையும் மக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் விஜய், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com