பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு உள்ளதா ? ஆணுக்கு இல்லையா? சிபிஎம் எம்எல்ஏ லதா ஆவேசம்

கற்பழிப்பு என்ற வார்த்தையை சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அவையில் பயன்படுத்தியதற்கு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ லதா கண்டனங்களை தெரிவித்தார்.
cpim mla Latha
Published on

சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கற்பழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர், இனி அவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் என்று சிபிஎம் எம்எல்ஏ லதா கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது ,அதில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ‘கற்பழிப்பு ‘என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.

ஆண்களுக்கு கற்பு இல்லையா ?

கற்பழிப்பு என்ற வார்த்தையை சட்ட மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஏன் பெண்களுக்கு மட்டும் தான் கற்பு இருக்கிறதா?ஆண்களுக்கு கற்பு இல்லையா என்ற கேள்வியை முன்வைத்தார்.

கற்பழிப்பு என்ற வார்த்தை கடந்துபோய் 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்குப் பதிலாக 'பாலியல் வன்புணர்வு' போன்ற புதிய மாற்று வார்த்தைகள் வந்துவிட்டன.

பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்முறை என்று கூறுவதே சரியான வார்த்தை பயன்பாட்டு முறையாகும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அவையில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது

எம்எல்ஏ-வின் பேச்சிற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நம் சகோதரியின் கோரிக்கை நியாயமானது இதை அவையில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்றும் , அதற்கான பொறுப்பு இருக்கிறது . அதற்கான வருத்தத்தை தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில் 'கன்னிப் பேச்சு' என்ற வார்த்தை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும், அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எம்எல்ஏ லதா மற்றும் பாமக அமைச்சர் சவுமியா அன்புமணி அகியோர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com