இருமுடி, தைப்பூச திருவிழா: 114 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் - ரெயில்வே நிர்வாகம்

இதில் 57 விரைவு ரெயில்கள் மற்றும் மறுமார்க்கமாக செல்லும் 57 விரைவு ரெயில்கள் என 114 ரெயில்கள் அடங்கும்.
train
Published on: 

இருமுடி, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு114 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

114 ரெயில்கள் நின்று செல்லும்

இருமுடி, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 114 ரெயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 57 விரைவு ரெயில்கள் மற்றும் மறுமார்க்கமாக செல்லும் 57 விரைவு ரெயில்கள் என 114 ரெயில்கள் அடங்கும்.

இது குறித்து ரெயில்வே நிர்வாகம் அறிக்கையில் குறிபிட்டுள்ளதாவது

அதன்படி சென்னை எழும்பூர் - திருச்சி விரைவு ரெயில், சென்னை எழும்பூர் - மதுரை விரைவு ரெயில், சென்னை எழும்பூர் - செங்கோட்டை விரைவு ரெயில், சென்னை எழும்பூர் - மன்னார்குடி விரைவு ரெயில், தாம்பரம் - ராமேஸ்வரம் விரைவு ரெயில், தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரெயில், சென்னை எழும்பூர் - கொல்லம் விரைவு ரெயில்,

சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் விரைவு ரெயில், சென்னை எழும்பூர் - சேலம் விரைவு ரெயில், பனாரஸ் - ராமேஸ்வரம் விரைவு ரெயில்,

புவனேஸ்வர் - ராமேஸ்வரம் விரைவு ரெயில், லோகமான்யதிலக் டெர்மினஸ் - காரைக்கால் விரைவு ரெயில், லோகமான்யதிலக் டெர்மினஸ் - மதுரை விரைவு ரெயில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் விரைவு ரெயில், ஜோத்பூர் - திருச்சி விரைவு ரெயில்கள்

மேலும் அயோத்தி - ராமேஸ்வரம் விரைவு ரெயில், பிரோஸ்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரெயில், பிக்கானோர் - மதுரை விரைவு ரெயில், பனாரஸ் - கன்னியாகுமரி விரைவு ரெயில், ஜோத்பூர் - மன்னார்குடி விரைவு ரெயில், ஹசரத் நிஜாமுதீன் - மதுரை விரைவு ரெயில், ஹசரத் நிஜாமுதீன் - கன்னியாகுமரி விரைவு ரெயில்,

சென்னை எழும்பூர் - மதுரை விரைவு ரெயில், தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரெயில், திருச்சி - சென்னை எழும்பூர், மதுரை - சென்னை எழும்பூர், செங்கோட்டை - சென்னை எழும்பூர், மன்னார்குடி - சென்னை எழும்பூர் ஆகிய விரைவு ரெயில்களும் மேல்மருத்தூரில் நின்று செல்லும்.

மேல்மருவத்தூரில் ரெயில் நின்று செல்லும்

இதில் 57 விரைவு ரெயில்கள் மற்றும் மறுமார்க்கமாக செல்லும் 57 விரைவு ரெயில்கள் என 114 ரெயில்கள் அடங்கும். இந்த ரெயில்கள் வருகிற டிசம்பர் 4-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 2 நிமிடங்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

X