புத்தக கொள்முதல் முறைகேடு : விசாரணை அதிகாரி நியமனம்

கடந்த 20 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் நூலகங்களுக்கு நடந்த புத்தகக் கொள்முதலை ஆய்வு செய்ய உத்தரவு.
high court
Published on: 

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஜி. வெங்கட்ராமனை (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர்) நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பெரியார் அறிவுலக மோசடி வழக்கு

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு ரூ.50 கோடி மதிப்பீட்டில் புத்தகங்கள் மற்றும் மின்-நூல்கள் (e-books) கொள்முதல் செய்யப்பட்டன.

இதில் 'அகல்விளக்கு பதிப்பகம்', 'பீனிக்ஸ் பதிப்பகம்' போன்ற நிறுவனங்களிடமிருந்து தரமற்ற, இணையதளங்கள் மற்றும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி உள்ளடக்கங்களைக் கொண்ட சுமார் 1,800-க்கும் மேற்பட்ட நூல்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டினார்.

லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை

இந்த முறைகேட்டில் 'சிக்மா', 'வித்யா' ஆகிய மேலும் இரண்டு பதிப்பகங்களுக்குத் தொடர்பிருப்பதும், கடந்த 3 ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு நூலகங்களிலும் இதேபோன்று நூல் கொள்முதல் முறைகேடுகள் நடந்திருப்பதும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நீதிமன்றத்தின் தலையீடு

கோவை பெரியார் அறிவு உலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விறைகேடுகள் குறித்து கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், லஞ்ச ஒழிப்புத் துறை திரட்டியுள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை நியமித்து உத்தரவிட்டுள்ளது

வழக்கை விசாரிக்க மூத்த அதிகாரி நியமனம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஜி. வெங்கட்ராமனை (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர்) நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கோவை பெரியார் அறிவு உலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், கடந்த 20 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் நூலகங்களுக்கு நடந்த புத்தகக் கொள்முதலை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆவணங்களை ஆய்வு செய்து வழிகாட்டுதல் வழங்குவதோடு, இரண்டு வாரங்களில் தனது முதற்கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றூ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், ஐ.பி.எஸ். அதிகாரி வெங்கட்ராமனுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கு ஒத்திவைப்பு

வெங்கட்ராமன் தனது முதற்கட்ட அறிக்கையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை இரண்டுன் வாரங்களுக்கு ஒத்திவைத்தார்

X