

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி போதை ஒழிப்பில் சிறந்து விளங்கிய காவல் துறையினருக்கான முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் 15 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆணை பிறப்பித்துள்ளார்.
கடலூர் எஸ்.பி.விவேகானந்த சுக்லா, ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ், சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவில் லட்சுமணன், காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார், திருச்சி மண்டலம் காவல் ஆய்வாளர் கண்ணன், கோவை மண்டல காவல் ஆய்வாளர் காமராஜ், தேனி குரங்கனி உதவி ஆய்வாளர் அருண், குமுளி தலைமைக் காவலர் ராஜ்குமார், நாகை வேட்டைக்காரணிருப்பு தலைமைக் காவலர் கார்த்திகேயன், திருப்பூர் நல்லூர் எஸ்.எஸ்.ஐ. ராமர், நெல்லை மதுவிலக்கு அமலாக்க பிரிவு தலைமை காவலர் ஐயப்பன், சென்னை அசோக் நகர் தலைமை காவலர் பிரேம்குமார் உள்ளிட்ட 15 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.