தஞ்சையில் மழைநீர் வடிகாலில் தேங்கிய குப்பைகள் அகற்றி தூர்வாரும் பணி தீவிரம்

வடிகாலைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
தஞ்சையில் மழைநீர் வடிகாலில் தேங்கிய குப்பைகள் அகற்றி தூர்வாரும் பணி தீவிரம்
Published on: 
Summary

மழைநீர் வடிகால்களைத் தூர் வாரி சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தஞ்சாவூர் மாநகராட்சியின் இறுதிப் பகுதியான விளார் ஊராட்சி தொடங்கும் இடத்தில், சாலையைக் குறுக்காகக் கடக்கும் மழைநீர் வடிகால் உள்ளது.

மழைநீர்

பல ஆண்டுகளாக இதில் குப்பை தேங்கி மழைநீர் எளிதில் செல்ல முடியாமல் இருந்ததுடன், துர்நாற்றமும் வீசியது. சுகாதாரக் கேள்விக் குறியான இந்நிலையில், வடிகாலைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

மாநகராட்சி

இதையடுத்து, வடகிழக்குப் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாக மாநகரில் உள்ள மழைநீர் வடிகால்களைத் தூர் வாரி சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விளார் சாலையின் குறுக்கே செல்லும் வடிகாலில் தேங்கியுள்ள குப்பையை அகற்றி, இயந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com