

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, நாளை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.