

தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது . தொடர்ந்து இந்த பணி நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து கோட்டங்களிலும் மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் வீராச்சாமி அறிவுறுத்தலின்படி டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க டிபிசி பணியாளர்கள் மூலம் டெங்கு கொசுபுழு ஒழிப்பு பணி மற்றும் டெங்கு கொசுபுகை மருந்து அடிக்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் தஞ்சை கொள்ளுப்பேட்டை தெரு, மேட்டு எல்லையம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று துப்புரவு அலுவலர் ராமச்சந்திரன் (மண்டலம் 2) மற்றும் பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது . தொடர்ந்து இந்த பணி நடந்து வருகிறது.