தூத்துக்குடி புதிய துறைமுகம் வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான நவீனரக கப்பல்

நவீன கப்பலை ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான நவீனரக கப்பல்
Published on: 
Summary

கப்பல் இன்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட சென்றது.

இந்திய கடற்படையில் ரோந்து பணி மேற்கொள்ள பல்வேறு நவீன ரக கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இருந்து வருகின்றன. அந்தவகையில் கடலோர காவல் படைக்கு தரையிலும், தண்ணீரிலும் பயணம் செய்யக்கூடிய ஹோவர் கிராப்ட் கப்பல்கள் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

கேரளம் மற்றும் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இது போன்ற கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

கேரளம்

இந்த வகையை சேர்ந்த ஹெச் 561 மற்றும் 562 ஆகிய 2 கப்பல்கள் கேரளம் மாநிலம் விளிஞ்சம் பகுதியில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பின்னர், தூத்துக்குடி புதிய துறைமுகத்திற்கு நேற்று வருகை தந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது.

தூத்துக்குடி

இந்த நவீன கப்பலை ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து பார்வையிட்டனர். அவர்கள் தங்களது செல்போனில் செல்பி எடுத்தனர். இன்று காலையிலும் ஏராளமானா பொதுமக்கள் பார்வையிட்டு புகைப்படங்கள் எடுக்க வந்தனர். ஆனால் அந்தக் கப்பல் இன்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட சென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com