சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கான உணவுக் கட்டணம் உயர்வு - அரசாணை வெளியீடு!

ஆட்டிறைச்சி, கோழிக்கறி, முட்டை, பால், கீரை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட திருத்தப்பட்ட உணவுப்பட்டியல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கான உணவுக் கட்டணம் உயர்வு - அரசாணை வெளியீடு!
Published on: 

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி, கல்லூரி விடுதிகளில் உள்ள மாணவர்களின் உணவுக் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;

“சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணாக்கர்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்கும் நோக்கில், மாதாந்திர உணவுக்கட்டணம் உயர்த்தி அரசாணை வெளியிடப்படுகிறது.

இதன்படி, பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கான உணவுக்கட்டணம் ரூ.1,400-லிருந்து 5.1,800 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கான உணவுக்கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1,16,424 (ஆதிதிராவிடர் நலம் - 91,424 + பழங்குடியினர் நலம் - 25,000) மாணாக்கர்கள் பயன்பெறுவர்.

இதற்காக, அக்டோபர் 2026 முதல் மார்ச் 2027 வரை கூடுதல் செலவினமாக ரூ.29,41,29,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாணாக்கர்களின் ஊட்டச்சத்து மற்றும் உடல்நலனை மேம்படுத்தும் வகையில், ஆட்டிறைச்சி, கோழிக்கறி, முட்டை, பால், கீரை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட திருத்தப்பட்ட உணவுப்பட்டியல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com