பொள்ளாச்சியில் ஒரு டன் இளநீர் பண்ணை விலை ரூ.15,500 ஆக நிர்ணயம்

கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தென்னை விவசாயிகள் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
பொள்ளாச்சியில் ஒரு டன் இளநீர் பண்ணை விலை ரூ.15,500 ஆக நிர்ணயம்
Published on

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் அதிகளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இங்கு விளையும் தேங்காய், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கோடை வெயில் காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில் ஒரு டன் இளநீரின் பண்ணை விலை ரூ.15 ஆயிரத்து 500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இளநீரை விரும்பி பருகி வருகிறார்கள். இந்த வாரம் நல்ல, தரமான குட்டை, நெட்டை வீரிய ஓட்டுரக மரங்களின் இளநீர்விலை, கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.39 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருடன் இளநீரின் விலை ரூ.15 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநீர்வரத்து மிக மிக குறைவாக இருப்பதால் பண்ணைகளில் இளநீர் வாங்குவதில் வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் கூடுதல் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். கடுமையான இளநீர் தட்டுப்பாடு காரணமாக வரும் வாரத்தில் இளநீரின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே தென்னை விவசாயிகள் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com