கொளத்தூர் தொகுதி வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. உடல் நிலையில் முன்னேற்றம்- விரைவில் வீடு திரும்புகிறார்

சென்னை கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு சுவாச பிரச்சனை தொடர்பாக தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 9-ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.
வி.எஸ்.பாபு
வி.எஸ்.பாபு
Published on: 
Summary

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு சுவாச பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டு விரைவில் வீடு திரும்ப உள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு சுவாச பிரச்சனை தொடர்பாக தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 9-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் கடந்த 2 வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் வி.எஸ்.பாபுவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நுரையீரலில் இருந்த சளி சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு இயல்பாக சுவாசிக்க தொடங்கியுள்ளார்.

20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com