தென் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
Heavy rain warning
Published on

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தென் தமிழக மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

இடி மின்னல் மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மழை பெய்யும் போது தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இடி மின்னல் நிகழும் போது திறந்தவெளிகளிலோ மரங்களின் அடியிலோ நிற்பதைத் தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், கடல் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com